நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் போஸ்டரை வைத்த புகைப்படத்தை தமிழக வீரர் அஸ்வின் ஐபிஎல் தொடரில் விளையாடும் டெல்லி அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, சென்னையில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. இன்று மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, 19 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 53 ரன்கள் எடுத்தது. மேலும், 429 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நாளைய ஆட்டத்தை தொடங்கவுள்ளது.
இந்தநிலையில், இந்திய அணியின் அதிரடி பந்துவீச்சாளர் அஸ்வின், கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் முதலே தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் சிறப்பாக ஆடிவந்தார். குறிப்பாக, சென்னை டெஸ்டில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் தலா 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இன்று நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் 106 ரன்கள் குவித்து, பந்துவீச்சில் போது 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தி வருகிறார்.
மேலும் அஸ்வின், இந்த டெஸ்ட் தொடரில் கடந்த 114 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய, முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். அதுமட்டுமின்றி அஸ்வின், 75 டெஸ்டில் 383 விக்கெட்களை கைப்பற்றினார். ஒரே டெஸ்ட் தொடரில், தனது சொந்த மண்ணில் பல சாதனைகளை படைத்த அஸ்வினை இதர கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் போஸ்டரை வைத்த புகைப்படத்தை அவர் ஐபிஎல் தொடரில் விளையாடும் டெல்லி அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில் நடிகர் விஜயின் முகத்திற்கு பதில் அஸ்வினின் முகத்தை வைத்து, ASH ANNA IN CHEPAUK AS மாஸ்டர் என்றும், 5/43 & 106 என அவர் எடுத்த விக்கெட்கள் மற்றும் ரன்களை குறிப்பிட்டுள்ளார். மேலும், “வாத்தி வந்தார், வாத்தி வென்றார்” என பதிவிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை அஸ்வினின் மனைவியும் பதிவிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…