அதிக டெஸ்ட் போட்டி ஜெயித்த கேப்டன் தோனியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது திறமையினால் பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளர். புதிதாக சாதனைகளையும் படைத்துள்ளார். மேலும் தனது தனது தலைமை பொறுப்பினாலும் அணியை வெற்றிப்பாதைக்கு பலமுறை அழைத்து சென்றுள்ளார்.
இதில், தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் நேற்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரில் 2-0 என்கிற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது விராட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி .
இதன் மூலம் 28 டெஸ்ட் போட்டிகளை வென்று இந்திய கேப்டன்களில் அதிக டெஸ்ட் போட்டிகளை வென்றவர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்த சாதனையை அவர் 48 போட்டிகளிலேயே பெற்று முதலிடம் வகித்து வருகிறார். இவரது வெற்றி சதவீதம் 58.33 ஆக உளது.
இவருக்கு அடுத்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய கிரிக்கெட் வீரருமான மஹிந்திரசிங் தோனி தலைமையில் 60 போட்டிகளில் தலைமை தாங்கி, 27 போட்டிகளை வெற்றிபெற செய்துள்ளார். இவரது வெற்றி சராசரி 45.00 ஆக உள்ளது.
தோனிக்கு அடுத்து மூன்றாவது முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவ்ரவ் கங்குலி தலைமையில் 49 போட்டிகளில் தலைமை தங்கி 21 போட்டிகளை வெற்றிபெற செய்துள்ளார். இவரது வெற்றி சராசரி 42.86 ஆக உள்ளது.