6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து ஜஸ்கரன் மிரட்டல் சாதனை…!
யுஎஸ்ஏவின் ஜஸ்கரன் மல்ஹோத்ரா ஒருநாள் போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் பாபுவா நியூ கினியா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி, நடைபெற்ற முதல் போட்டியில் அமெரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில்,நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற பாபுவா நியூ கினியா பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி,களமிறங்கிய அமேரிக்கா அணி இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியில்,6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து ஜஸ்கரன் மல்ஹோத்ரா சாதனை படைத்துள்ளார்.இதனால்,தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்சல் கிப்ஸுக்குப் பிறகு ஒரு நாள் சர்வதேச போட்டியில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜஸ்கரன் பெற்றுள்ளார்.மேலும்,ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையையும் மல்ஹோத்ரா பெற்றார்.
குறிப்பாக,இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் 124 பந்துகளில் 16 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 173 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
6️⃣6️⃣6️⃣6️⃣6️⃣6️⃣!@usacricket‘s Jaskaran Malhotra becomes the second player after Herschelle Gibbs to hit six sixes in an over in ODI cricket! ????
His final-over blitz took him to 173* against PNG – the first ODI hundred for the USA! ???????? pic.twitter.com/BXOtFR1diY
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 9, 2021
USA’s Jaskaran Malhotra hit 6️⃣ sixes in an over off PNG’s Gaudi Toka ????
He’s just the fourth player in international cricket history to achieve the feat! ????
(???? via @willowtv, USA only) pic.twitter.com/J6jlLRLLjc
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 9, 2021
யார் இவர்?:
பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் பிறந்த ஜஸ்கரன் மல்கோத்ரா, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தவர்.
எனினும்,இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல்,அமெரிக்கா சென்ற அவருக்கு,அமெரிக்காவின் தேசிய அணியில் இடம் கிடைத்தது. இதனையடுத்து,தற்போது அவர் அமெரிக்க அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.இந்த நிலையில், 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த ஜஸ்கரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.