சென்னை : நடைபெற்று வந்த அமெரிக்காவுடனான டி20 சுற்று பயணத்தொடரில் 2-வது போட்டியிலும் தோல்வியடைந்தது வங்கதேச அணி.
வங்கதேச அணி அமெரிக்காவில் டி20 சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அமெரிக்கா அணி வங்கதேச அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து 2-வது போட்டியாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய அமெரிக்கா அணி தொடக்கத்தை சிறப்பாக அமைத்து விளையாடியது. தொடக்க வீரர்கள் அமைத்த ஒரு அருமையான கூட்டணியில் ஒரு நல்ல ஸ்கோரை நோக்கி அமெரிக்கா அணி நகர்ந்தது. இவர்களை தொடர்ந்து ஆரோன் ஜோன்ஸ் நிலைத்து பொறுமையாக விளையாட அமெரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்திருந்தது.
அமெரிக்கா அணியில் மோனான்க் பட்டேல் 38 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல வங்கதேச அணியில் ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்திபிஸுர் ரஹ்மான், ரிஷாட் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இதனை தொடர்ந்து எளிய இலக்கான 145 ரன்களை எடுக்க வங்கதேச அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே ரன்களை எடுக்க தவறி முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
மேலும், எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாமல் விக்கெட்டுகளை இழந்து வெளியேறி கொண்டிருந்தனர். இதனால் இறுதியில் விறுவிறுப்பாக சென்ற போட்டியில் 19.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அமெரிக்கா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 30 ரன்கள் எடுத்திருந்தார்.
அதே போல அமெரிக்கா அணியில் அலி கான் 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார். 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மட்டும் கடைசி டி20 போட்டியானது நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…