மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் யூபி வாரியர்ஸ் அணியை வெற்றி பெற்றது.
மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் 10-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் யூபி வாரியர்ஸ் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற யூபி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய யூபி வாரியர்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்துள்ளது.
160 ரன்கள் என்ற இலக்கில் முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹேலி மேத்யூஸ்-யாஸ்திகா பாட்டியா ஜோடி 54 ரன்கள் குவித்தது. ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா இருவரும் ஆட்டமிழக்க, அதன் பிறகு நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் களமிறங்கினர். தங்களது அட்டகாசமான பேட்டிங்கால் நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர்.
17.3 ஓவர்களில் 164 ரன்களை அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் யூபி வாரியர்ஸ் அணியை வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் 53* ரன்களும், நாட் ஸ்கிவர்-பிரண்ட் 45* ரன்களும், யாஸ்திகா பாட்டியா 42 ரன்களும் குவித்துள்ளனர். இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…