UPWvsGG : யூபி வாரியர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி..!
குஜராத் ஜெயன்ட்ஸ்க்கு எதிரான போட்டியில் யூபி வாரியர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆண்டு அறிமுகமான மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 அவர்களின் ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் குவித்துள்ளது.
170 ரன்கள் என்ற இலக்கில் யூபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி மற்றும் ஸ்வேதா செஹ்ராவத் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சில நிமிடங்களில் ஒற்றை இழக்க ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இந்த பரபரப்பான ஆட்டத்தின் இறுதி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கிரேஸ் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார்.
Grace Harris (59* off 26) is from another ???? #graceharris #GGvsUPW #GGvUP #Cricket #crickettwitter #WPL #WPLT20 #TATAWPL #wpl23 #WomensIPL #UPWarriorz #Harris #UPvGG pic.twitter.com/Ad1lFHGPlq
— Cricopia.com (@cric_opia) March 5, 2023
20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை அடித்த யூபி வாரியர் அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வெற்றி பெற்றது. யூபி வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 59 ரன்களும், கிரண் நவ்கிரே 53 ரன்களும், சோஃபி எக்லெஸ்டோன் 22 ரன்களும் குவித்துள்ளனர். குஜராத் அணியின் கிம் கார்த் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக கிரேஸ் ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.