’லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்’ தொடரின் இரண்டாவது சீசன் கடந்த 18-ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கியது. இத்தொடர் அடுத்த மாதம் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு கெளதம் காம்பீரின் இந்தியா கேப்பிடல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மணிப்பால் டைகர்ஸ் வெற்றி:
நேற்று மணிப்பால் டைகர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே 2-வது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் இறங்கிய 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்தது. 174 ரன்கள் இலக்குடன் இறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஒரு கையால் சிக்ஸர்:
இந்நிலையில், மேற்கிந்தியத் தீவு வீரர் கெய்ல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியபோது பிரபல பந்து வீச்சாளர்கள் கூட அவரை எதிர்கொள்ள பயந்தனர். சர்வதேச கிரிக்கெட்டிற்கு குட்பை சொன்ன கெய்ல் தற்போது லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடரில் பேட்டிங்கில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 44 வயதான கெய்ல் நேற்று குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். மணிப்பால் டைகர்ஸ் அணிக்கு எதிராக 24 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார்.
இந்த போட்டியின் போது மணிபால் அணியின் கொலின் டி கிராண்ட்ஹோம் பந்தில் கிறிஸ் கெய்ல் ஒரு கையால் சிக்ஸர் அடித்தார். இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி டெல்லியில் 70 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் காட்சிகள்…