19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. கேப்டன் பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது.இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு முன்னேறியது.
அதன்படி இந்திய அணி தான் எதிர்கொண்ட லீக் ஆட்டங்களில் இலங்கை அணியை 90 ரன் வித்தியாசத்திலும், ஜப்பானை அணியை 10 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்து அணியை 44 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.அதே போல் கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை 74 ரன்னில் வீழ்த்தியது.
இந்திய அணியை போல் நியூசிலாந்து,பாகிஸ்தான் ,வங்காளதேசம், அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்திய அணி அரை இறுதியில் பாகிஸ்தானை இன்று(4-ந்தேதி) எதிர் கொள்கிறது.
நாங்கு முறை சாம்பியனான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 7வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையுமா? என்று கிரிக்கெட் வட்டாரங்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் பேட்டிங்கில் ஜெய்ஷ்வால் (207 ரன்) மிக நல்ல ஃபர்மில் உள்ளார். சக்சேனா, கேப்டன் பிரியம் கார்க், துருவ் ஜுரல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர். பந்து வீச்சில் ரவி பிஷ்னோய் (11 விக்கெட்) மற்றும் கார்த்திக் தியாகி (9 விக்கெட்), ஆகாஷ் சிங் (7 விக்கெட்) ஆகியோர் எதிரணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்.
பாகிஸ்தான் அணி லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து (7 விக்கெட்), ஜிம்பாவே (38 ரன்) தோற்கடித்து. வங்காள தேசத்துடன் மோதிய ஆட்டம் முடிவு இல்லை. மேலும் கால்இறுதியில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டில் வீழ்த்தியுள்ளது.2 முறை உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி 6வது தடவையாக இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது இதனால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியா யு19 அணியில் 2000 வருடம் (கேப்டன்: முகமது கைப்), 2008 வருடம் (கேப்டன்: விராத் கோஹ்லி), 2012 வருடம் (கேப்டன்: உன்முக்த் சந்த்) மற்றும் 2018 வருடம் (கேப்டன்: பிரித்வி ஷா) ஆகியோரின் தலைமையில் இளைஞர் உலக கோப்பையை இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…