பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது.
நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது தொடக்க வீரரான இஷான் கிஷான் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மாவும் சூரியகுமார் யாதவும் சற்று நிதானமாக நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதிலும் குறிப்பாக சூரியகுமார் யாதவ் வாய்ப்பாக கிடைக்கிற பந்தை பவுண்டரிகள்,சிக்ஸர்கள் என மைதானத்தில் பறக்க விட்டார். இருவரும் தங்களது கூட்டணியில் 81 ரன்கள் சேர்த்தனர். இதனால் அணியின் ஸ்கோர் 99 ரன்கள் என இருக்கையில் ரோகித் சர்மா 36 எண்களில் ஆட்டம்இழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய திலக் வருமா சூரியகுமார் உடன் இணைந்து அதிரடி காட்டினார்.
அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்தடுத்து கிளம்புறீங்க பேட்ஸ்மென்ட்கள் ஒரு சில பௌண்டரிகள் அடித்து அணியின் ஸ்கோரை அவர்களது பொறுப்புக்கு உயர்த்தினார்கள். இறுதியில் 20 ஓவருக்கு மும்பை அணி 7 விக்கெட் இழந்து 192 ரன்கள் எடுத்தது. இதனால் 193 என்ற இலக்கை அடைய பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
பஞ்சாப் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய ப்ரப்சிம்ரன் சிங் தனது முதல் பந்தலையே இஷான் கிஷான் இடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு களம் இறங்கிய ரூஸோ 1 ரன்னுக்கு பும்ராவின் அட்டகாசமான யார்க்கர் பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அதே ஓவரின் கடைசி பந்தில் சாம்கர்ரன் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே லியாம் லிவ்விங்ஸ்டோன் ஆட்டம் இழக்க பஞ்சாப் அணி 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அதன் பிறகு ஹர்ப்ரீத் சிங் மற்றும் ஷஷாங்க் சிங் இருவரும் சற்று பொறுமையாக விளையாடி கொண்டிருந்தனர். இருந்தாலும் ஹர்ப்ரித் சிங் 13 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் தடுமாறி வந்தது.
ஜிதேஷ் ஷர்மாவும் நன்றாக விளையாடுவர் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின் பஞ்சாப் அணிக்காக வழக்கம் போல் ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா நிலைத்து ஆட தொடங்கினர். சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ஷஷாங்க் சிங் துரதிஷ்ட
வசமாக பும்ரா பந்து வீச்சில் 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பஞ்சாப் அணியில் தனி ஒருவராக நின்று இளம் வீரரான அசுதோஷ் சர்மா அதிரடி காட்டிக்கொண்டிருந்தார். அவரது அதிரடியில் பஞ்சாப் அணி வெற்றியை நோக்கி நெருங்கியது. அவருடன் இனைந்து பொறுப்பேற்று அவருக்கு உறுதுணையாக நின்று ஹாப்ரித் ப்ராரும் வாய்ப்பாக அமைகிற பந்தில் பவுண்டரிகள் அடித்து போராடினார்.
அதிரடி காட்டிக் கொண்டிருந்த அசுதோஷ் சர்மா 61 ரன்களுக்கு துரதிஷ்டவசமாக கோட்சீயின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் போட்டி அப்படியே மும்பை அணியின் பக்கம் சாய்ந்தது. இறுதியில் 19.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து பஞ்சாப் அணி 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்தது. அசத்தலாக பந்து வீசிய மும்பை அணியின் பும்ரா, கோட்சீ தலா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர்.