உமேஷ் யாதவ் தந்தை மரணம்; பிரதமர் மோடி எழுதிய இரங்கல் கடிதம்.!
உமேஷ் யாதவ் தந்தை மறைவுக்கு பிரதமர் மோடி, தனது வருத்தத்தை தெரிவிக்கும் விதமாக கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவின் தந்தை திலக் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மோடி, உமேஷ் யாதவிற்கு இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை உமேஷ் யாதவ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த கடிதத்தை உமேஷ் பகிர்ந்து, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். உமேஷ் கூறியதாவது, மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி ஜி, எனது தந்தையின் சோகமான மறைவுக்கான உங்கள் இரங்கல் செய்திக்கு நன்றி. இதன்மூலம் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மன நிறைவாக உள்ளது என்று உமேஷ் ட்வீட் செய்துள்ளார்.
Thank you, Honourable Prime Minister @narendramodi ji, for your condolence message on the sad demise of my father????. This gesture means a lot to me and my family. pic.twitter.com/u68cE4e6Jn
— Umesh Yaadav (@y_umesh) March 3, 2023