39 ரன்களுக்கு சுருண்ட உகண்டா ..! 134 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் பிரம்மாண்ட வெற்றி!
![WIvUGA](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/06/WIvUGA-file-image.webp)
டி20I : டி20 உலகக்கோப்பை தொடரின் இன்று காலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி உகாண்டா அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 18-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், உகண்டா அணியும் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியே விளையாடியது. இதனால், உகாண்டா அணியின் பந்து வீச்சும் அந்த அணிக்கு சரிவர கைகொடுக்கவில்லை. சார்லஸ் 44 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 22 ரன்கள், ரஸ்ஸல் 30 ரன்கள், ரோவ்மன் பவல் 23 ரன்கள் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினார்கள்.
அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து 174 என்ற இமாலய இலக்கை அடைவதற்கு பேட்டிங் செய்ய களமிறங்கியது உகாண்டா அணி. உகாண்டா அணிக்கு எதிர்பாராத தொடக்கமும் கிடைக்கவில்லை, உறுதுணையாக பொறுப்புடன் விளையாட ஒரு பேட்ஸ்மேனும் கிடைக்கவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்து வீச்சால் அதிலும் குறிப்பாக அகேல் ஹொசின் சிறப்பாக பந்து வீசினர். அவர் 4 ஓவர்கள் பந்து வீசி 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும், உகாண்டா அணியில் எந்த ஒரு வீரரும் சரிவர விளையாடாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால், 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. மேலும், இது வரலாற்று வெற்றியாகவும் டி20 உலகக்கோப்பையில் கருதப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)
ஈரோடு : நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்..திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேச்சு!
February 8, 2025![V. C. Chandhirakumar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/V.-C.-Chandhirakumar.webp)
18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!
February 8, 2025![L2E EMPURAAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/L2E-EMPURAAN.webp)
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!
February 8, 2025![Arvind Kejriwal - Manish sisodia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Arvind-Kejriwal-Manish-sisodia.webp)