#U19WorldCup: டாஸ் வென்ற நியூசிலாந்து  அணி முதலில் பேட்டிங் தேர்வு

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி முதல் போட்டியில்  நியூஸிலாந்து அணியும்,  நேபாள அணியும் மோதுகிறது. இந்த போட்டி கிழக்கு லண்டனில் உள்ள Buffalo மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து  அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதே நேரத்தில்  2-வது போட்டியில் இலங்கை அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதுகிறது. இந்த போட்டி கிம்பர்லி நகரில் உள்ள டயமண்ட் ஓவல் மைதானத்தில்  நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

நியூசிலாந்து அணி:

லூக் வாட்சன், டாம் ஜோன்ஸ், ஸ்நேஹித் ரெட்டி, ஆலிவர் டெவாடியா, ஆஸ்கார் ஜாக்சன்(கேப்டன்), லாச்லன் ஸ்டாக்போல், சாக் கம்மிங், அலெக்ஸ் தாம்சன்(விக்கெட் கீப்பர்), மாட் ரோவ், மேசன் கிளார்க், எவால்ட் ஷ்ரூடர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நேபாளம் அணி:

அர்ஜுன் குமால், ஆகாஷ் திரிபாதி, தேவ் கனல்(கேப்டன்), உத்தம் தாபா மகர்(விக்கெட் கீப்பர்), தீபக் பொஹாரா, திபேஷ் கண்டேல், தீபக் பொஹாரா, குல்சன் ஜா, சுபாஷ் பண்டாரி, திலக் பண்டாரி, ஆகாஷ் சந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி:

புலிந்து பெரேரா, விஷேன் ஹலம்பகே, சினெத் ஜயவர்தன (கேப்டன்), ரவிஷான் டி சில்வா, ருசந்த கமகே, தினுர களுபஹன, சாருஜன் சண்முகநாதன் (விக்கெட் கீப்பர்), மல்ஷா தருபதி, ருவிஷான் பெரேரா, விஷ்வ லஹிரு, கருக சங்கேத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜிம்பாப்வே அணி:

நதானியேல் ஹலபங்கனா, ரியான் கம்வெம்பா (விக்கெட் கீப்பர்), பனாஷே தருவிங்கா, காம்ப்பெல் மேக்மில்லன், ரோனக் படேல், கோல் எக்ஸ்டீன், மேத்யூ ஷொங்கன் (கேப்டன்), பிரண்டன் சுங்குரோ, நியூமன் நியாம்ஹுரி, அனேசு கமுரிவோ, ரியான் சிம்பி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்