19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நாளை இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரான இதில் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய அணி நாளை களமிறங்குகிறது. 15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
16 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களில் முறையே இந்திய அணி தென்னாப்பிரிக்காவையும், ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இதையடுத்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.
#IPL 2024 : அசத்தலான மாற்றத்தை செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ..!
இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு பெனோனியில் இந்த போட்டியானது நடைபெறவுள்ள நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இரண்டுமே சமபலத்துடன் உள்ளதால் வெற்றி பெற இரண்டு அணிகளுமே கடுமையாக போராடும். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன்பு இரண்டு முறை (2012, 2018) மோதியுள்ள நிலையில் இரண்டிலும் இந்தியாவே வெற்றி வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…