#U19WC2024 : ஸ்காட்லாந்து அணியை தோற்கடித்து தென்ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி..!

Published by
அகில் R

U19 கிரிக்கெட் உலககோப்பையின் 21வது போட்டியானது இன்று நடைப்பெற்றது.அதில், ஸ்காட்லாந்து அணியும் , தென் ஆப்பிரிக்கா அணியும் மோதியது. அதில், டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்த காரணத்தால்  ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்ய  களமிறங்கியது.

தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜேமி டங்க் நாலா பக்கமும் சிதறடித்தார். இவர் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்தார். இவருடன் 4 வது விக்கட்டுக்கு கைகோர்த்த ஸ்காட்லாந்து அணியின் கேப்டனும், விக்கெட்கீப்பருமான ஓவன் கோல்ட் 97 ரன்கள் எடுத்து சதத்தை தவற விட்டார்.

பின் களம் கண்ட எந்த வீரரும் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க , இறுதியில் அந்த அணி 50 ஓவருக்கு 9 விக்கெட்டை இழந்து 269 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் ரிலே நார்டன் 3 விக்கெட்டை எடுத்திருந்தார்.

அதன்பின் 270 என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது தென்னாபிரிக்கா அணி. ஆட்டத்தின் தொடக்கம் முதலே அந்த அணி சரிவை சந்திக்காமல் சிறப்பாக விளையாடியது. அதிலும் தொடக்க வீரராய் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்டோல்க் மிக சிறப்பாக விளையாடி 37 பந்துகளில்  86 ரன்களை விளாசினார்.

அதன் பின் களமிறங்கிய வீரர்களும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேற அவர்களை தொடர்ந்து  திவான் மரைஸ் 80 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா அணி வெறும் 27 ஓவருக்குள் 273 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

Published by
அகில் R

Recent Posts

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுத்த ஹிஸ்புல்லா! 250 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…

8 minutes ago

அதானி விவகாரம்., வயநாடு விவகாரம்., ஆரம்பிக்கும் முன்னரே ஆட்டத்துக்கு தயாரான எதிர்க்கட்சிகள்!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…

25 minutes ago

“கூட்டணிக்கு வர 100 கோடி கேக்குறான்” அதிமுக கூட்டத்தை கலாய்த்த உதயநிதி!

சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …

1 hour ago

ஐபிஎல் ஏலத்தில் ஷாக்கிங் டிவிஸ்ட்..! விற்கப்படாத 3 முக்கிய வீரர்கள்!

ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…

1 hour ago

இன்று இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலம்! கைவசமுள்ள இருப்புத் தொகை எவ்வளவு?

ஜெட்டா :  ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…

2 hours ago

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

2 hours ago