#U19WC2024 : சூப்பர் சிக்ஸின் விதிமுறைகள்..!
19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. 16 அணிகள் குரூப் ஏ, பி, சி, டி என நான்கு குழுக்களாக பிரிக்கபட்டு விளையாடி வந்த நிலையில் தற்போது குரூப் பிரிவின் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
பளுதூக்குதல் போட்டியில் தமிழ்நாடு அணி தங்கம்.!
இந்த முதல் 3 அணிகளும் அவர்கள் குரூப் சுற்றில் பெற்ற ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெறுவார்கள். சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒரே அணியில் குரூப் A மற்றும் D அணிகள் இடம்பெறும் ,அதேபோல குரூப் B மற்றும் C அணிகள் மற்றொரு அணியில் இடம்பெறும். சூப்பர்-சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு அணியும் இரண்டு போட்டிகளை மட்டுமே விளையாடுவர். அதுவும் எதிரணியுடன் விளையாடுவர்.
இறுதியில் ஒரே அணியில் இடம்பெற்ற முதல் இரண்டு இடத்தை பிடித்த 2 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 4 அணிகள் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு தகுதி பெரும். முதல் அரையிறுதி வருகிற பிப்ரவரி 6 ம் தேதியும், இரண்டாவது அரையிறுதி பிப்ரவரி 8 ம் தேதியும் நடைபெறும். அதை தொடர்ந்து அரையிறுதியில் வெற்றி பெரும் இரு அணிகளும் பிப்ரவரி 11 தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதிபெறுவார்கள்.
.