19 வயதிற்கு உட்பட்டோர் விளையாடி வரும் (ICC Under 19 World Cup 2024) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர் சிக்ஸில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற நிலையில் அதில் தகுதி பெற்ற 4 அணிகள் தற்போது அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
ஏற்கனவே தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன. இதையடுத்து அரையிறுதிக்குள் நுழையும் நான்காவது அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகள் சூப்பர் சிக்ஸ் போட்டியில் மோதின. இதில் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்லிங்கான வெற்றியை பெற்றது.
தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பெற்ற அந்த அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இதை தொடர்ந்து பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதுகின்றன. பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவும், பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…