ரோஹித்தின் கண்ணீருக்கு பழிக்கு பழி வாங்குமா இந்திய இளம் படை..!
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பெனோனியில் உள்ள வில்லோமூர் பார்க் மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இரண்டு முறை இறுதிப்போட்டியில் சந்தித்துள்ளன.
இரண்டு முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டி இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது முறையாக நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றுமா ..? அல்லது இந்திய அணி வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றுமா ..? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றினால் ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றுவது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அணியை பழிக்கு பழிவாங்கும். காரணம் கடந்த ஓராண்டில் மூன்றாவது முறையாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இறுதி போட்டியில் மோதுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள் மூத்த வீரர்கள் கொண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்தன.
6-வது முறையாக கோப்பையை கைப்பற்றுமா இந்தியா..? ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு..!
இந்த 2 இறுதிப்போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனால் இன்றைய இறுதிப்போட்டியில் u-19 இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ரோஹித்தின் கண்ணீருக்கு பழி வாங்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 50 ஓவர் உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெற்றது. போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. இப்போட்டி முடிந்தவுடன் கேப்டன் ரோகித் சர்மா உணர்ச்சிவசப்பட்டு டிரஸ்ஸிங் ரூமுக்கு அழுது கொண்டே சென்றார். இதை பார்த்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.