19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை (U19WC2024) தொடரில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பெனோனி வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து தென்னாப்பிரிக்கா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்டோக் 14 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். டேவிட் டீகர் 0, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76, ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். தொடர்ச்சியாக விக்கெட்கள் விழுந்து கொண்டிருந்த சமயத்தில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் நன்றாக விளையாடி களத்தில் நின்று கொண்டு இருந்தார்.
ஆனால், அடுத்ததாக அவரும் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு ஆலிவர் வைட்ஹெட் 22 , திவான் மரைஸ் 3 எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக வந்த ரிச்சர்ட் செலட்ஸ்வேன் அதிரடியாக விளையாடி 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தர். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு தென்னாப்பிரிக்கா 244 ரன்கள் எடுத்துள்ளனர்.
#INDvsENG : வரலாற்று சாதனையை படைத்தார் அஸ்வின்..!
அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76, ரிச்சர்ட் செலட்ஸ்வான் 64 ரன்கள் எடுத்துள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்களையும், முஷீர் கான் 2, சௌமி பாண்டே, நமன் திவாரி ஆகியோரும் தலா 1 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
தென்னாப்பிரிக்கா 244 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணி 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. மேலும், இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். நாளை மறுநாள் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே 2-வது அரை இறுதி போட்டி நடைபெற உள்ளது. வருகின்ற 11 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…