U19 Semi-Final2: பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு தகுதி
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை (U19WC2024) தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி தென்னாப்பிரிக்காவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெனோனியில் இருக்கும் வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 48.5 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் சார்பில் அசன் அவைஸ் மற்றும் அராபட் மின்ஹாஸ் ஆகியோர் தலா 52 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் டாப் ஸ்டாகர் 6 விக்கெட்களை அள்ளினார். இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பாகிஸ்தான் பந்துவீச்சு பெரும் சவாலாகவே இருந்தது.
AusvsPakSemi-Final 2 : 179 ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணி!
ஒரு கட்டத்தில் இரண்டு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருப்பது போல தெரிந்த போதும், இறுதியாக 49.1 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லிங்கான வெற்றியை பெற்றது. கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து வரும் 11ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டி செல்லும்.