U19 Semi-Final1: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய அணி
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை (U19WC2024) தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி தென்னாப்பிரிக்காவை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தென்னாப்பிரிக்காவின் பெனோனி வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஒவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் ராஜ் லிம்பானி மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில் 48.5 ஒவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்து 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
U19 Semi-Final1: இந்தியாவுக்கு எதிராக 244 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா!
அந்த அணியின் சச்சின் தாஸ் 96 ரன்களும், கேப்டன் உதய் சஹரன் 81 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இதை தொடர்ந்து 8ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.