U-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது.
ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்தியாவும், 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்தும் மோதவுள்ளது. இறுதிப்போட்டியை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் தீவிரமாக இருப்பதால் இன்று போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கவுள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங், ஷேக் ரஷீத், யாஷ் துல் (கேப்டன் ), நிஷாந்த் சிந்து, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், தினேஷ் பனா (விக்கெட் கீப்பர்), கௌஷல் தம்பே, ராஜ் பாவா, விக்கி ஓஸ்ட்வால், ரவிக்குமார் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
இங்கிலாந்து அணி வீரர்கள்:
ஜார்ஜ் தாமஸ், ஜேக்கப் பெத்தேல், டாம் ப்ரெஸ்ட்(கேப்டன்), ஜேம்ஸ் ரெவ், வில்லியம் லக்ஸ்டன், ஜார்ஜ் பெல், ரெஹான் அகமது, அலெக்ஸ் ஹார்டன்(விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் சேல்ஸ், தாமஸ் ஆஸ்பின்வால், ஜோசுவா பாய்டன் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…