U-19 உலகக்கோப்பை: நாளை இறுதிப்போட்டி- 5-வது முறையாக மகுடம் சூடுமா ..? இந்தியா..!

Published by
Castro Murugan

நாளை நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதுகிறது. 

U-19 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து 290 ரன்கள் எடுத்தது. இதனால், 291 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 41.5 ஓவர் முடிவிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது.

2016-ம் ஆண்டிலிருந்து இந்தியா தொடர்ந்து நான்காவது முறையாக  இறுதிப் போட்டி வந்துள்ளது. ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது. இந்தியா 2000, 2008, 2012 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு விராட் கோலியின் தலைமையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி கோப்பையை வென்றது. இதுபோன்ற சூழ்நிலையில், கோலி தனது அனுபவத்தை 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மற்றும் கவுஷல் தம்பே ஆகியோருடன் ‘ஜூம்’ அழைப்பில் பகிர்ந்து கொண்டார். அப்போது, ​​அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனிட்கரும் உடன் இருந்தார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பையை இங்கிலாந்து அணி ஒரு முறை வென்றுள்ளது. 1998-ஆம் ஆண்டு இறுதி போட்டியில் நியூஸிலாந்து உடன் இங்கிலாந்து மோதியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை தொடரில்  இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு சென்றது இல்லை. இந்த வருடம் தான் இங்கிலாந்து இறுதிப்போட்டி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Castro Murugan

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

3 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

4 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

4 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

5 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

5 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

6 hours ago