U-19 உலகக்கோப்பை: மிரட்டிய ஷேக் ரஷீத், யாஷ் துல்- ஆஸ்திரேலியாவிற்கு 291 ரன் இலக்கு ..!
2-வது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து 290 ரன்கள் எடுத்துள்ளது.
U-19 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டனர்.
இதனால், இந்திய அணி ரன்கள் எடுக்க தடுமாறியது. இந்திய அணி தனது முதல் விக்கெட்டை 8-வது ஓவரில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 6 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 17-ஆக இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் ஹர்னூர் சிங் 16 ரன் எடுத்து அவுட் ஆனார். பின்னர் களம்கண்ட ஷேக் ரஷீத், கேப்டன் யாஷ் துல் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
இருவரும் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் கேப்டன் யாஷ் துல் சதம் விளாசி 110 ரன்களில் ரன் அவுட்டானார். இவர்கள் இருவரும் கூட்டணியில் 200 ரன்கள் சேர்க்கப்பட்டது. மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஷேக் ரஷீத் சதம் விளாசுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ரன்னில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் எடுக்க இறுதியாக இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து 290 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 291 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளது.