U-19 உலகக்கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
U-19 உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 16 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடி வருகிறது. மொத்தம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பி பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் பங்களாதேஷ், இந்தியா மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய பங்களாதேஷ் 37.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அந்த அணியில் மெஹரோவ் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் ரவி குமார் 3 , விக்கி ஓஸ்ட்வால் 2 விக்கெட்டை பறித்தனர்.
பின்னர் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிங்கிய ஹர்னூர் சிங் 3 பந்தில் டக் அவுட் ஆனார். பிறகு சிறப்பாக விளையாடிய இந்திய அணி 30.5 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 117 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வரும் 2-ஆம் தேதி இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோத இருக்கிறது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…