U-19 உலகக்கோப்பை: இன்று அரையிறுதி இந்தியா- ஆஸி., பலப்பரீட்சை..!
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா- இந்தியா இன்று மாலை 6;30 மணிக்கு மோதுகிறது.
U-19 உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 16 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடி வருகிறது. மொத்தம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பி பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய அணி இதுவரை வலுவாக செயல்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் உகாண்டா அணிகளை எளிதாக தோற்கடித்து. காலிறுதியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் சிரமங்களை எதிர்கொண்டு வெற்றியை பதிவு செய்தனர்.
காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு வந்துள்ளது. இந்தியா இன்று நடைபெறும் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. நான்கு முறை சாம்பியனான இந்திய அணி கடந்த சீசனில் ரன்னர் அப் ஆனது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இவ்வாறான நிலையில் இருவருக்குமிடையே இன்று மாலை 6;30 மணிக்கு இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கேப்டன் யாஷ் துல் உட்பட ஐந்து முன்னணி வீரர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால், இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்தாலும் அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடி அணியை வெற்றிப் பாதையில் வழி நடத்தி உள்ளனர். குறிப்பாக உகாண்டா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 6 மாற்று வீரர்கள் இடம் பெற்று இந்திய அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தொடர்ந்து நான்காவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது:
இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக, இந்திய அணி 2016, 2018 மற்றும் 2020 அண்டர்-19 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு வந்திருந்தது. 2018 இல், இந்தியா உலகக் கோப்பையையும் வென்றது. அதே நேரத்தில் 2016 மற்றும் 2020 இல் அந்த அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.
இந்திய அணி வீரர்கள்:
யாஷ் துல் (கேப்டன்), ஹர்னூர் சிங், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, எஸ்கே ரஷித் (துணை கேப்டன்), நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாதவ், அனிஷ்வர் கவுதம், தினேஷ் பானா, ஆராத்யா யாதவ், ராஜ் அங்கத் பாவா, மனவ் பராக், கௌஷால் தாம்பே, , வாசு வாட்ஸ், விக்கி ஓஸ்ட்வால், ரவி குமார், கர்வ் சங்வான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.