U-19 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து-ஜிம்பாப்வே இரு அணிகளுக்கிடையிலான போட்டியின் போது நிலநடுக்கம் உணரப்பட்டது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து இடையேயான போட்டியின் போது நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தின் போது மைதானத்தில் லேசான நடுக்கம் ஏற்பட்டது. அயர்லாந்துக்கு எதிராக ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நிலநடுக்கம் உணரப்பட்டது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீரர்கள் சற்று பதற்றமடைந்தனர். இருப்பினும், சிறிது நேரத்தில் எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
அயர்லாந்து சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ ஹம்ப்ரீஸ், ஆறாவது ஓவரின் ஐந்தாவது பந்தை பிரையன் பென்னட்டிடம் வீசிய போது நில நடுக்கம் உணரப்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் போட்டி பாதிக்கப்படவில்லை. வர்ணனையாளர்கள் நேரடி ஒளிபரப்பின் போது அவர்கள் அனுபவித்த நடுக்கம் குறித்தும் பேசினர்.
அயர்லாந்து ஜிம்பாப்வேயை வீழ்த்தியது:
இந்த போட்டியில் அயர்லாந்து ஜிம்பாப்வேயை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளேட் பைனலுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து 48.4 ஓவரில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து விளையாட களமிறங்கிய அயர்லாந்து அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…