ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கோப்பை 2024 இன்று முதல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. முதலில் இலங்கையில் நடத்தவிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடைசி நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்து vs அமெரிக்கா அணிகளும், 2-வது போட்டியில் தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் மோதவுள்ளது.
இந்த உலககோப்பை கிரிக்கெட் உலகிற்கு பல நட்சத்திரங்களை கொடுத்துள்ளது. அதிலும் இந்தியாவிற்கு யுவராஜ் சிங் (2000), ரோகித் சர்மா (2006), விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா (2008), ரிஷப் பந்த் மற்றும் இஷான் கிஷன் (2016), ஷுப்மான் கில் (2018) போன்ற நட்சத்திரங்கள் இந்தப் போட்டியில் ஜொலித்தனர்.
குஜராத்தில் துயரம்! படகு கவிழ்ந்து 16 பேர் பலி!
இந்த ஆண்டு நடைபெறும் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று தொடங்கி பிப்ரவரி 11-ஆம் தேதி வரை உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணிதான் அதிக முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. இந்தியா ஐந்து முறை பட்டம் வென்றுள்ளது. அதன்படி, 2000, 2008, 2012, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில்உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.
இது தவிர, 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இந்தியா இறுதிப்போட்டிக்கு சென்றது. இந்திய அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா மூன்று முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் வென்றுள்ளது. பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றி உள்ளனர்.
இந்திய அணி வீரர்கள்:
உதய் சஹாரன் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, முஷீர் கான், ஆரவெல்லி அவ்னிஷ் ராவ் (விக்கெட் கீப்பர்), சௌம்ய குமார் பாண்டே (துணை கேப்டன்), முருகன் அபிஷேக், இனேஷ் மகாஜன் (விக்கெட் கீப்பர்), தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி மற்றும் நமன் திவாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
குரூப் A: பங்களாதேஷ், இந்தியா, அயர்லாந்து, அமெரிக்கா.
குரூப் B: இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள்.
குரூப் C: ஆஸ்திரேலியா, நமீபியா, இலங்கை, ஜிம்பாப்வே.
குரூப் D: ஆப்கானிஸ்தான், நேபாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான்.
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…
கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…
அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…