U-19 உலகக்கோப்பை:ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா வீழ்த்தி 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
U-19 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.நேற்று 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர்.அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடங்கத்திலே இருந்து ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டனர்.
இதனால்,இந்திய அணி ரன்கள் எடுக்க தடுமாறியது.இந்திய அணி தனது முதல் விக்கெட்டை 8-வது ஓவரில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 6 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.அப்போது அணியின் எண்ணிக்கை 17-ஆக இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் ஹர்னூர் சிங் 16 ரன் எடுத்து அவுட் ஆனார்.பின்னர் களம்கண்ட ஷேக் ரஷீத், கேப்டன் யாஷ் துல் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
இருவரும் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தனர்.அதிரடியாக விளையாடிய கேப்டன் கேப்டன் யாஷ் துல் சதம் விளாசி 110 ரன்களில் ரன் அவுட்டானார்.இவர்கள் இருவரும் கூட்டணியில் 200 ரன்கள் சேர்க்கப்பட்டது. மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஷேக் ரஷீத் சதம் விளாசுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ரன்னில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் எடுக்க இறுதியாக இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து 290 ரன்கள் எடுத்தது.இதனால் 291 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது,
தன்படி,ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக காம்ப்பெல் கெல்லவே,டீக் வில்லி களமிறங்கினர்.ஆனால்,வந்த வேகத்திலேயே டீக் வில்லி 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து,களமிறங்கிய கோரி மில்லர் நிதானமாக விளையாடி 38 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர்,காம்ப்பெல் கெல்லவேவும் 30 ரன்களில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
மேலும்,அணியின் கேப்டன் கூப்பர் கோனோலி 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில்,ஷேக் ரஷீத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து,களமிறங்கிய லச்லன் ஷா அரை சதம் அடித்தார்.பின்னர் அவரும் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில்,41.5 ஓவர் முடிவிலேயே ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியைப் பொறுத்தவரை,அதிகபட்சமாக ரவிக்குமார்,நிசாந்த் சிந்து தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.இதனால்,96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று,இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.இதனைத் தொடர்ந்து,நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் நான்கு முறை சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
WHAT. A. PERFORMANCE! ???? ????
India U19 beat Australia U19 by 9⃣6⃣ runs & march into the #U19CWC 2022 Final. ???? ???? #BoysInBlue #INDvAUS
This is India U19’s 4th successive & 8th overall appearance in the U19 World Cup finals. ????
Scorecard ➡️ https://t.co/tpXk8p6Uw6 pic.twitter.com/tapbrYrIMg
— BCCI (@BCCI) February 2, 2022