நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தது. பிறகு இறங்கிய பாகிஸ்தான் 49.4 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 230 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியை காண இருநாட்டில் உள்ள ஏராளமான ரசிகர்கள் ஹெடிங்லி மைதானத்தில் குவித்தனர். இப்போட்டியில் இருநாட்டு வீரர்கள் விக்கெட் எடுத்தாலும் , சிக்ஸர் , பவுண்டரி அடித்தாலும் அந்நாடு ரசிகர்கள் அவர்களுக்கு கோஷமிட்டு தங்களது உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்தது.ஆனால் ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சாளர் கடைசி சில ஓவரில் சொதப்பியதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.போட்டி நடுவில் இருநாட்டு ரசிகர்களும் கோஷமிட்டனர்.அப்போது திடீரென இருநாட்டு ரசிகர்களும் இடையில் தகராறு ஏற்பட்டது.
முதலில் இருநாட்டு ரசிகர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருநாட்டு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இந்த தாக்குதலை பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…