ரோஹித் சர்மாவுடன் பிரச்சனையா? விளக்கம் கொடுத்த சுப்மன் கில்!

Published by
பால முருகன்

சுப்மன் கில் : ரோஹித் ஷர்மாவுடன் பிரச்சனை என்ற தகவல் பரவிய நிலையில், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு சுப்மன் கில் விளக்கம் கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் மாற்று வீரர்களால் ஒருவராக இடம்பெற்றுள்ள சுப்மன் கில் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக இந்தியாவுக்கு திரும்ப இருப்பதாக சமீபத்தில் விமர்சனங்கள் எழுந்தது.

அது மட்டுமின்றி, சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்டன் ரோஹித் ஷர்மாவை பாலோவ் செய்து இருந்த நிலையில், விமர்சனங்கள் எழுந்தவுடன் அன்பாலோவ் செய்துவிட்டதாகவும் புதிய பிரச்சனை வெடிக்க தொடங்கியது. இதனையடுத்து, ரோஹித் ரசிகர்கள் சுப்மன் கில்லை திட்டு சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியீட்டு வந்தனர். நெட்டிசன்கள் பலரும் இந்திய கேப்டனை பலோவ் செய்யவில்லையா என்பது போல கேள்விகளை எழுப்ப தொடங்கினர்.

ரோஹித் ஷர்மாவை கில் அன்ஃபாலோவ் செய்த பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் செய்திகள் பரவ தொடங்கியது. உண்மை என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், இவை அனைத்திற்கும் விளக்கம் கொடுக்கும் விதமாக சுப்மன் கில் ரோஹித் ஷர்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரோஹித் ஷர்மாவுடன் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், ரோகித் சர்மா மற்றும் அவரது மகள் சமைராவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட இரண்டு புகைப்படத்தையும் பகிர்ந்த சுப்மன் கில் ” ரோகித் சர்மாவிடம் இருந்து நானும் சமைராவும் ஒழுக்கத்தை எப்படி கற்று கொள்வது என்பதை கற்று வருகிறோம் ” என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

“வீழ்வேன்னு நினைச்சியா? எனக்கு ஒன்னும் இல்லை” அதே கம்பீரத்துடன் விஷால்!

சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…

8 minutes ago

“என்னுடைய அரசியல் வாழ்க்கையில் ‘வேர்களைத் தேடி’ திட்டம் ஒரு மைல் கல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை:  அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…

33 minutes ago

பொங்கல் வின்னர் மதகஜராஜா? படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…

2 hours ago

“என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்திப் போடனும்.. கண்ணு வெச்சிடாதீங்க ப்ளீஸ்..”- நடிகை குஷ்பு கலகல!

சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…

3 hours ago

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது!

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…

3 hours ago

2 செயற்கைக்கோள் தூரம் குறைப்பு… கடைசியில் இஸ்ரோ எடுத்த முடிவு!

டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…

3 hours ago