அஸ்வின் : டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய இறுதி போட்டியில் இந்திய அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியில் இந்த வீரர் இருந்தால் இந்திய அணிக்கு கோப்பை உறுதி தான் அஸ்வின் அவரது யூடுயூப் சேனலில் பேசி இருந்தார்.
அவர் கூறுகையில், “தென்னாபிரிக்கா அணியின் சுழற் பந்து வீச்சாளரான ஷம்சி விக்கெட்டுகளை எடுத்தாலும் ரன்களை அதிகமாக விட்டு கொடுப்பார். அவர் இது போல போடுவதால் தான் அவரால் தென் ஆப்பிரிக்க அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை.
மேலும் இதனால் தான் கேஷவ் மகாராஜை தென் ஆப்பிரிக்கா அணி நம்பி அணியில் எடுக்கிறார்கள். கேசவ் மகாராஜை ‘டவுன் ஆப் தி கிரவுண்ட்’ சென்ற ஆடுவது பேட்ஸ்மேன்களுக்கு கடிமனாக உள்ளது.
ஆனால், இந்தப் போட்டியில் பந்து சற்று பவுன்ஸ் ஆகும் என்பதால் கேஷவ் மகராஜ் பந்துவீச்சை டவுன் தி கிரவுன்டில் தான் பேட்ஸ்மேன்கள் அடிக்க வேண்டும். மறுமுனையில் மறுபுறம் ஷம்சி ரன்களை லீக் செய்பவராகப் இருந்து வருகிறார்.
அதே போல கேஷவ் மகராஜால் செய்யக் கூடியதை ஷம்சியால் செய்ய முடியாது. ஷம்சி பந்துகளில் வேகம் இல்லை. அவரால் பேட்ஸ்மேன்களை பேக் பூட்டில் தள்ளி ஆட வைக்க முடியாது. ஷம்சியால் விக்கெட் எடுக்க முடியும் தான் அதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை.
ஆனால், இப்போது இருக்கும் இந்திய பேட்டிங் வரிசையை பார்த்தல் 2 விக்கெட் போனாலும் கவலைபடமாட்டார்கள். ஷம்சியை அடித்தே ஆடுவார்கள். எனவே, ஷம்சி இந்த இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியில் இருந்தால் இந்தியாவுக்கு அது சாதமாக தான் இருக்கும், இதனால் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம்” என கூறி இருந்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…