க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
தனது எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகை திரிஷா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர் புதிதாக க்ரிப்டோ கரன்சியை உருவாக்கி இருப்பதாகவும், உடனடியாக அதை வாங்குமாறும் தெரிவித்திருந்தார்.
பின்னர், இன்ஸ்டாகிராமில் தனது அக்கவுண்ட் ஹேக் ஆகிவிட்டதாக கூறியிருக்கும் அவர், அதனை சரி செய்யும் வரை போஸ்ட் செய்வது தான் அல்ல என்றும் த்ரிஷா விளக்கம் அளித்துள்ளார். தனது சமீபத்திய படமான விடாமுயர்ச்சியின் வெற்றியில் தற்போது திகைத்து வரும் த்ரிஷாவுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது, த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் கிரிப்டோகரன்சி மோசடி விளம்பர பதிவுகள் நீக்கப்பட்டதை ரசிகர்கள் கவனித்தனர். இருப்பினும், நடிகை த்ரிஷாவின் கணக்கு ஹேக் செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக, 2017 ஆம் ஆண்டு, ஜல்லிக்கட்டு சர்ச்சையில் த்ரிஷா சிக்கினார்.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை குறித்து த்ரிஷாவின் எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டு, ஜல்லிக்கட்டுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்த பீட்டாவை ஆதரிப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்து. பின்னர் அந்த பதிவுகள் நீக்கம் செய்யப்பட்டு, தனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தெளிவுப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.