ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி இரண்டு இடத்தை பிடித்த ட்ரெண்ட் போல்ட்!
நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா அணி மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது .போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் அடித்தனர். நியூஸிலாந்து அணி 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 157 ரன்கள் எடுத்து 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் 10 ஓவர் வீசி 51 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை பறித்து ஒரு ஓவர் மெய்டனும் செய்தார்.அவர் வீழ்த்திய 4 விக்கெட்டில் தொடர்ந்து 3 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.
கடைசி ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார்.அந்த ஓவரில் ட்ரெண்ட் போல்ட் வீசிய மூன்றாவது பந்தில் உஸ்மான் கவாஜா அவுட் ஆனார்.பிறகு மிட்செல் ஸ்டார்க் ,ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் ஆகியோர் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்.
இந்நிலையில் ஒருநாள் போட்டியில் கடைசியாக 3 ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்திய வீரர்களில் ட்ரெண்ட் போல்ட் இரண்டு இடத்தை பிடித்து உள்ளார்.
போல்ட் (ஜூன் 2019) *
ஷமி (ஜூன் 2019)
போல்ட் (நவம்பர் 2018)