இன்று தொடங்கும் பயிற்சி போட்டி ..! யார் யாருக்கு போட்டி?

Warm Up match

டி20I : அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கவுள்ளது.

ஐபிஎல் திருவிழா நிறைவு பெற்று அடுத்த  கட்டமாக கிரிக்கெட் ரசிகர்களின் அடுத்த ஒரு மாத விருந்தாக 20 ஓவர் உலகக்கோப்பையானது நடைபெற உள்ளது. இதனால் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் மறுபுறம் கலந்து கொள்ள போகும் 20 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஐசிசியின் எந்த ஒரு பெரிய போட்டிகள் நடந்தாலும் அதற்கு முன்பாக பயிற்சி போட்டிகள் நடத்துவது வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதற்கு ஏற்ப இந்த டி20 பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கவுள்ளது. பயிற்சி போட்டி மட்டும் இல்லாமல் டி20 உலகக்கோப்பையின் லீக் போட்டிகளும் நடைபெறுவது அமெரிக்கா என்பதால் அனைத்து போட்டிகளும் அங்கு காலை பொழுதிலும், ஒரு சில போட்டிகள் மட்டும் மாலை, இரவு என நடைபெற இருக்கிறது.

மேலும், ஒளிபரப்பாகும் போட்டிகளை நாம் இங்கிருந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலோ அல்லது ஹாட்ஸ்டார் ஆப்பிலோ நேரலையாக கண்டுகளிக்கலாம். கடந்த ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை போலவே இலவசமாக ஹாட்ஸ்டார் ஆப்பில் கண்டுகளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.  இன்றைய முதலான நாளில், பயிற்சி போட்டிகளில் மொத்தம் 3 போட்டிகள் நடைபெற உள்ளது, அவற்றின் விவரத்தை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய பயிற்சி போட்டிகளின் விவரம் 

  • இலங்கை vs நெதர்லாந்து – இரவு 8 மணி (இந்திய நேரம்)- புளோரிடா.
  • வங்கதேசம் vs அமெரிக்கா – இரவு 9 மணி (இந்திய நேரம்) – டல்லாஸ்.
  • ஆஸ்திரேலியா vs நமீபியா – மே-29 காலை 4.30 மணி (இந்தியா நேரம்) – டிரினிடாட்.

இதில் ஆஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான போட்டி மட்டும் மே-29 ம் தேதி அதாவது நாளை அதிகாலை நடைபெற உள்ளது. ஆனால் அமெரிக்காவில் அது மாலை ஆகும். அதே போல இந்திய அணி, வங்கதேச அணியுடன் வருகிற ஜூன்-1 ம் தேதி அன்று பயிற்சி போட்டியில் ஈடு பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்