11-வது சீசனாக தொடரும் சோகம்…மோசமான சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்.!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி தான் அதிக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கோப்பைகளை வென்ற அணி என்ற சாதனையைப் பெற்றுள்ளது. ஆனால் (நேற்று) ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி நம்பமுடியாத சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அது என்ன சாதனை என்றால், மும்பை அணி தொடர்ந்து 11 -வது சீசன்களில் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக மும்பை அணி கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றது. குறிப்பாக 2012, 2011, 2010 மற்றும் 2009 சீசன்களின் முதல் ஆட்டங்களில் வென்றது.
பிறகு, 2013-ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதிய முதல் போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து 11 சீசனாக எந்த சீசனிலும் மும்பை அணி முதல் போட்டியில் வெற்றிபெறவில்லை. மேலும் மும்பை அணி வரும் 8-ஆம் தேதி சென்னை அணியுடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.