#IPL2022: டாஸ் வென்ற பஞ்சாப்; களமிறங்கும் பெங்களூர்..!
டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகிறது. இரு அணிகள் மோதும் போட்டி மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் அணி:
மயங்க் அகர்வால்(கேப்டன்), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், பானுகா ராஜபக்சே(விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ராஜ் பாவா, அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரார், சந்தீப் சர்மா, ராகுல் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பெங்களூர் அணி:
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.