ஐபிஎல் போட்டியில் டாஸ் ஃபிக்சிங்? சர்ச்சையை கிளப்பிய டு பிளெசிஸ் வீடியோ !

Du Plessi [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் டாஸ்ஸின் போது டுபிளெசிஸ் செய்த சில சைகையின் வீடியோ ஒன்று கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் 25-வது போட்டியில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் இடும் நிகழ்வின் போது ஹர்திக் பாண்டியா சுண்டி விட்ட நாணயம் கீழே விழும் அந்த நாணயத்தை போட்டியின் நடுவராக இருந்த ஜவகல் ஸ்ரீநாத் கீழே விழுந்த நாணயத்தை திருப்பி எடுப்பது போல இருக்கும். அந்த ஒரு வீடியோ காட்சி இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி கொண்டிருந்தது.

அந்த வீடீயோவை சமூகத்தளத்தில் ரசிகர்கள் பல சர்ச்சையான கேள்விகளை எழுப்பி பகிர்ந்து வந்தனர். ஆனால், அதற்கு ஐபிஎல் வாரியத்திடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராமல் இருந்தது. அதன் பிறகு ரசிகர்கள் அதனை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டனர். இந்நிலையில், ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது.

இந்த போட்டியின் டாஸ் இடும் நிகழ்வின் போது பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெசிஸ்ஸியும், ஹைதரபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸும் சந்திக்கும் பொழுது டு பிளெசிஸ், பேட் கம்மின்ஸ்ஸிடம் சில சைகைகளை செய்து என்னவோ பேசி கொண்டிருப்பார். அது கடந்த ஆர்சிபி போட்டியின் போது டாஸ் நிகழ்வில் நடந்த அந்த நிகழ்வை அப்படியே சொல்வது போல அந்த செய்கையானது அமைந்து இருக்கும்.

இந்த வீடியோவை ரசிகர்கள் சமூகத்தளத்தில் பகிர்ந்து வருவதோடு ஐபிஎல் வாரியத்தை இதற்கு விளக்கம் அளிக்க கூறியும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வீடீயோவை குறித்து பல கிரிக்கெட் பிரபலங்களும் தங்களது கருத்தை மறைமுகமாக பல இடங்களில் பேசி வருகின்றனர். இது போல எந்த ஒரு விளக்கமும் ஐபிஎல் வாரியம் அளிக்காமல் இருப்பதனால் மக்களுக்கு கிரிக்கெட் மீது இருக்கும் ஒரு நம்பிக்கை போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்