நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக விலகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 399 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து அணி 400 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கி மோசமான ஆட்டம் காரணமாக 22 ஓவரிலே அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ரன்கள் எடுத்து 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு சிரமங்கள் குறையவில்லை. தற்போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். நேற்றைய போட்டியின் போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் ஏற்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த போட்டியில் தனது 9-வது ஓவரில் ரீஸ் டாப்லி பந்துவீசும்போது காயம் அடைந்தார். டாப்லியின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டு அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த ஓவரில் ரீஸ் டாப்லி ஐந்து பந்துகளை மட்டுமே வீச முடிந்தது. மீதம் இருந்த பந்தை ஜோ ரூட் வீசி ஓவரை முடித்தார்.
முதல் ஓவரிலேயே ரீஸ் டாப்லி குயின்டன் டி காக்கின் விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்துக்கு முதல் விக்கெட்டை எடுத்து கொடுத்தார். நேற்றைய போட்டியில் ரீஸ் டாப்லி 8.5 ஓவர் வீசி 88 ரன் கொடுத்து 3 விக்கெட்டை பறித்தார். ரீஸ் டாப்லி அணியில் இருந்து விலகியது இங்கிலாந்துக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இந்த உலகக் கோப்பையில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியின் மோசமான பார்ம் குறையாமல் தொடர்கிறது.
இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 1-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. புள்ளி பட்டியலில் இங்கிலாந்துக்கு கீழே ஆப்கானிஸ்தான் மட்டுமே உள்ளது. நியூசிலாந்து தவிர இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளன.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…