பட்டியலில் முதலிடம் ..! பெங்களூரின் தொடர் வெற்றிக்கு செக் வைத்த சென்னை..!

Published by
murugan

பெங்களூர் அணி 9 விக்கெட்டை இழந்து 122 ரன்கள் எடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஐபிஎல் தொடரின் இன்றயை போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர்.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் , டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர். இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக  ஜடேஜா 62*, டு பிளெசிஸ் 50 ரன்கள்  எடுத்தனர்.

192 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக விராட் கோலி  படிக்கல் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் படிக்கல்  அதிரடி ஆட்டத்தை காட்டினார். நிதானமாக விளையாடிய கோலி 8 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய படிக்கல் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி 34 ரன்னில் வெளியேறினார்.

களமிறங்கிய வேகத்தில் வாஷிங்டன் சுந்தர் 7 ரன் எடுத்து ருதுராஜிடம் கேட்சை கொடுத்தார். அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 22 ரன் இருக்கும்போது ஜடேஜா ஓவரில் போல்ட் ஆனார். அடுத்து இறங்கிய ஏபி டிவில்லியர்ஸ்  4 ரன்னில் ஜடேஜா ஓவரில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

அடுத்தடுத்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக பெங்களூர் அணி 9 விக்கெட்டை இழந்து 122 ரன்கள் எடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பெங்களூர் அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று வந்த நிலையில் இன்றைய 5-வது போட்டியில் தோல்வியைத் தழுவியது. சென்னை அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இப்போட்டியில் ஜடேஜா 3 விக்கெட் மற்றும் ஒரு ரன் அவுட் செய்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

தமிழ்நாடு வந்தார் அமித் ஷா.., புதிய பாஜக தலைவர் குறித்து ஆலோசனை.!

தமிழ்நாடு வந்தார் அமித் ஷா.., புதிய பாஜக தலைவர் குறித்து ஆலோசனை.!

சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…

8 minutes ago

விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…

17 minutes ago

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

பெங்களூர் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…

8 hours ago

குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…

8 hours ago

நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

10 hours ago

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

10 hours ago