சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மன் தரவரிசைப் பட்டியல், பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் ,ஆல் -ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.இதில் டி -20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில் ,ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது இங்கிலாந்து அணி.எனவே ஆஸ்திரேலிய அணி ஒருநாள் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 871 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.மற்றொரு இந்திய வீரரான ரோகித் ஷர்மா 855 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 3 -ஆம் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 829 புள்ளிகளுடன் உள்ளார்.ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவ் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 754 புள்ளிகளுடன் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் 84 ரன்கள் ,இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் ,மூன்றாவது ஒருநாள் போட்டியில் 112 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் 722 புள்ளிகளுடன் நியூசிலாந்து வீரர் போல்ட் முதல் இடத்திலும் ,இந்திய வீரர் பும்ரா 719 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், 701 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் ரகுமான் மூன்றாம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் 3 இடங்கள் முன்னேறி 675 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.அதேபோல் இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆச்சர் 18 இடங்கள் முன்னேறி 637 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டர்க்வுடன் 10-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.ஆஸ்திரேலிய அணியுடனான மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஜோப்ரா ஆச்சர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.மேலும் கிறிஸ் வோக்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர் ஹெசல்வுட் 7 இடங்கள் முன்னேறி 654 புள்ளிகளுடன் 8- வது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆல் -ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 301 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் 3 இடங்கள் முன்னேறி 281 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மூன்றாம் இடத்தில் பாகிஸ்தான் வீரர் இமத் வாசிம் 278 புள்ளிகளுடன் உள்ளார்.இந்திய வீரர்களை பொறுத்தவரை 246 புள்ளிகளுடன்ரவீந்திர ஜடேஜா 8 -வது இடத்தில் உள்ளார்.
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…