கிரிக்கெட் : டக்வர்த் லூயிஸ் முறையை அறிமுகப்படுத்திய டோனி லூயிஸ் காலமானார்.!
டோனி லூயிஸ் இவருக்கு வயது 78. இவர்தான் கிரிக்கெட்டில் பிரபலமான டக்வொர்த் முறையை அறிமுகப்படுத்தியாவர் இவர்தான். இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். முதலில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி, பின்னர் பத்திரிக்கையாளராக பணியாற்றினார்.
அதன் பிறகுதான் பிராங் டக்வோர்த் என்ற கணித ஆராய்ச்சியாளருடன் இணைந்து 1997-ல் டக்வொர்த் லூயிஸ் முறையினை கண்டறிந்தார். இது கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட்டம் வானிலை அல்லது பிற காரணங்களால் தடைபட்டால், இரண்டாவதாக ஆடும் அணிக்கான இலக்கை கணிதவியலின் உதவியுடன் அறிந்திடும் முறையாகும்.
இந்த முறையை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி 1999ம் ஆண்டு இந்த முறையை அதிகாரபூர்வமாக ஏற்று கொண்டது. 2014-ல் இது டக்வொர்த்-லூயிஸ்- ஸ்ட்ரெர்ன் என்று டி.எல்.எஸ் முறையாக பிரபலமானது.
இந்த டக்வொர்த் லூயிஸ் முறையை கண்டறிந்தவர்களில் ஒருவரான டோனி லூயிஸ் லண்டனில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மறைந்தார். இவரது மறைவிற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.