“அதிஷ்டகார கேப்டன் தல தோனி”முதலும் கடைசியும் சுவாரஷ்யத்தை பாருங்க..!!

Published by
Dinasuvadu desk

ஆசியக் கோப்பை 2018-ன் சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி ஆப்கான் அணியை எதிர் கொண்டது.இதில்  இந்திய அணிக்கு  மகேந்திர சிங்  தோனி மீண்டும்  கேப்டனாக களமிறங்கினார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாளைய ஏக்கத்தை ‘தல’ தோனி , பூர்த்தி அந்த போட்டி  அமைந்தது.இந்திய அணி தோனி கேப்டன் சி யில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அந்தப் போட்டி ‘டை’ ஆனது.

Image result for INDIA AFGHAN ASIAகிட்டத்தட்ட 696 நாட்களுக்குப் பிறகு மகேந்திர சிங் தோனி மீண்டும் கேப்டன் ஆகி இந்திய அணியின்  இளம் வீரர்களை வழிநடத்தினார், அனைத்திலும் வெற்றி கண்ட கேப்டன் தோனி தன் 200வது கேப்டன்சி போட்டியில் டை கண்டது கொஞ்சம் துரதிர்ஷ்டமே. ஆனால் தோற்காதது அதிர்ஷ்டமே என்று ரசிகர்கள் சந்தைப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த போட்டியில் தோனி 200 என்றெல்லாம்  ஹாஷ்டேக்குகள் உருவாகி அதைப்பற்றி ரசிகர்கள் பேசத் தொடங்கினர். தோனியைப் பார்த்து தன் விக்கெட் கீப்பிங், பேட்டிங் என்று வடிவமைத்துக் கொண்ட மொகமத் ஷெஜாத் மிக அருமையான அதிரடி சதம் கண்டு தன் ஆசானின் பெருமைக்குரிய சிஷ்யராக மாறியதை அந்த போட்டியில் பார்க்க முடிந்தது.

நடந்த போட்டி தோனியின் 200-வது கேப்டன் சி க்கான  ஒருநாள் போட்டி, இது அவரது ஒருநாள் கேப்டன்சியில் கடைசி போட்டி என்று கூறப்படுகிறது அப்படிப்பார்க்கும் போது 2007-ல் இந்திய அணி ராகுல் திராவிட் தலைமைக்கு பிறகு  தோனியிடம் கேப்டன்சி வழங்கப்பட்டது.

டோனி கேப்டன்சியில் இறங்கிய முதல் போட்டி டி20 உலகக்கோப்பையாகும், அதாவது ஒரிஜினல் முதல் போட்டி ஸ்காட்லாந்துக்கு எதிராக, ஆனால் அந்தப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராகவே தோனியின் முதல் கேப்டன்சி முழு போட்டி என்ற அளவில் நடைபெற்றது. அந்தப் போட்டியும் இருதரப்பினரும் ஸ்கோர் அளவில் சமன் செய்த ‘டை’ ஆனது, முதலில் பேட் செய்த இந்திய அணி ராபின் உத்தப்பாவின் 50 ரன்கள், தோனியின் 33 ரன்களுடன் 141/9 என்று குறைவான ரன் எண்ணிக்கை கண்டது. பாகிஸ்தான் அணி மிஸ்பா உல் ஹக்கின் அதிரடி 53 ரன்களுடன் இதே 141 ரன்கள் எடுக்க ஆட்டம் டை ஆனது.
அன்று உலகக்கோப்பை போட்டி என்பதால் அப்போது பவுல் அவுட் முறை வைத்திருந்தனர், அதில் இந்திய அணி வென்றது, தோனி தன் கேப்டன்சியில் முதல் போட்டியில் வெற்றி கண்டார், ஆனால் அது ஸ்கோர் அளவில் சமன் என்ற நிலையில் தோனி கேப்டன்சியின் முதல் போட்டியும் ரன்கள் அளவில் சமன், அவரது கடைசி கேப்டன்சி போட்டியும் அன்று ஆப்கானுக்கு எதிராக டை ஆகியுள்ளது தற்போது இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது தோனி 1ST AND LAST என்ற ஹஷ்டக்_ குடன்.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…

8 hours ago

கனமழையை தொடர்ந்து குளிர்! டெல்லி மக்களை வாட்டி வதைக்கும் வானிலை!

டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…

9 hours ago

ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை…பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு!

சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…

10 hours ago

“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை  சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.  மாணவி கொடுத்த புகாரின்…

10 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…

11 hours ago

ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை! அன்புமணியை சமாதானம் செய்ய முடிவு?

சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில்  இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…

11 hours ago