ஐபிஎல் திருவிழாவின் இன்றைய இரவு போட்டி ..!! வெற்றியை தொடரபோவது எந்த அணி ?

LSGvsGT Preview [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் 21-வது போட்டியாக இன்று நடைபெற இருக்கும் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதவுள்ளது.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 21-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றியிலிருந்து வருகிறார்கள் என்பதால் இந்த போட்டியில் எதிர்ப்பார்ப்பிற்கு பஞ்சம் இருக்காது.

அதே போல லக்னோ அணியின் வேகபந்து வீச்சிற்கு ஸுப்மன் கில் படை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை காணவும் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், இந்த 2 அணிகளில் அடித்து ஆடக்கூடிய வீரர்கள் ஏராளம் என்பதால் மைதானத்தில் சிக்சருக்கு பஞ்சம் இருக்காது எனபதும் குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே வெறும் 4 போட்டிகள் மட்டும் நடைபெற்றுள்ளது. அந்த 4 போட்டிகளிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை கூட லக்னோ அணி வெற்றி பெறாமல் இருப்பதே குஜராத் அணிக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த 4 போட்டியிலும் குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டிய செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள் பட்டியல் 

லக்னோ அணி வீரர்கள் : 

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக், மயங்க் யாதவ்

குஜராத் அணி வீரர்கள் :

விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tvk
TVK Leader Vijay speech in TVK general committee meeting
thirumavalavan aadhav arjuna
RCB IPL
Aadhav Arjuna
TVK General Committee meeting
edappadi palanisamy sabanayagar appavu