சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புதிய அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரில் 7வது லீக் போட்டியில் கின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புதிய அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. இப்போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளன. இருப்பினும் இரு அணிகளின் மிடில் ஆர்டர் மட்டுமே முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடினர்.
முதல் நாளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் விளையாடியது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது முதல் போட்டியில் மற்றொரு புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது. முதல் போட்டியில் லக்னோவின் தீபக் ஹூடா மற்றும் ஆயுஷ் படோனி ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
அதே நேரத்தில் முன்னாள் சென்னை கேப்டன் எம்.எஸ் தோனியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அரை சதம் அடித்தார். இன்றைய போட்டியில் ஜேசன் ஹோல்டர் லக்னோ அணியில் களமிறங்குவார் என கூறப்படுகிறது. மறுபுறம், விசா பிரச்சினை காரணமாக இந்தியாவை தாமதமாக வந்து முதல் போட்டியில் விளையாடாத சென்னை அணி வீரர் மொயின் அலி இன்றைய போட்டியில் இன்று விளையாடவுள்ளார்.
எதிர்பார்க்கப்படும் சென்னை அணி:
ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்.எஸ் தோனி, ருத்ராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, டெவோன் கான்வே, பிராவோ, கிறிஸ் ஜோர்டான், ஷிவம் துபே, ஆடம் மில்னே
எதிர்பார்க்கப்படும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி:
கே.எல் ராகுல் (கேப்டன்), எவின் லூயிஸ், மணீஷ் பாண்டே, ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர்
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…
சென்னை : கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டிகள் இன்று நிறைவு கட்டத்தை…