நடப்பு உலகக்கோப்பை தொடர் கடந்த மே 30-ம் தேதி தொடங்கியது.இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் மோதியது.அதில் அரையிறுதிக்கு நியூஸிலாந்து ,இந்தியா , ஆஸ்திரேலியா , இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றனர்.
முதல் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா , இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இன்றைய இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியும் ,இங்கிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பையை கைப்பற்றியது கிடையாது.
இதனால் உலகக்கோப்பையை வெல்ல போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பையின் மொத்த பரிசு தொகையை ஐசிசி அறிவித்து உள்ளது.இன்று இறுதி போட்டியில் உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு 27 கோடியே 42 லட்சம் வழங்கப்படும். இன்றைய இறுதி போட்டியில் தோல்வியடைந்த அணிக்கு 13 கோடியே 71 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்து உள்ளது .
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…