IPL2024: மழையால் இன்றைய போட்டி ரத்தானது..!
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை பெய்ததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து மழை பெய்து வந்து நிலையில் இந்த போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
ஒரு பந்து கூட வீசாமல் இன்றைய போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது ஹைதராபாத் அணி 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. குஜராத் அணிக்கு கடைசி இரண்டு போட்டிகளும் மழை காரணமாக கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் அணி இன்னும் ஒரு போட்டியில் விளையாட உள்ளது. குஜராத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடி உள்ளது. நடப்பு தொடரில் இனிமேல் குஜராத் அணி எந்த போட்டியில் விளையாடாது.