இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டி-20 போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது.அதேபோல் 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (4-ந்தேதி) நடைபெறுகிறது.
விராட் கோலிக்கு 20 ஓவர் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.20 ஓவர் போட்டிக்கான அணியில் இருந்து முன்னாள் கேப்டனும், அணியின் சீனியர் வீரருமான டோனி நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 12 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது.
12 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, குருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது போட்டி. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…