ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது.

நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது.

இந்த போட்டியை மும்பை அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் ஒரு வாய்ப்பு கைவசம் இருக்கும். ஒரு வேளை தோல்வி அடைந்தால் இந்த தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகி விடும்.

அதே நேரம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த போட்டியின் மூலம் நல்ல ஒரு வெற்றி கிடைத்தால் ரன் ரேட்டை அதிகப்படுத்தி இரண்டாம் இடத்தை தக்க வைக்க அதிக வாய்ப்புகள் உண்டு. 

நேருக்கு நேர்

இந்த இரு அணிகளும் நேருக்கு நேராக மொத்தம் 23 போட்டிகள் விளையாடி உள்ளனர். இதில் 9 முறை கொல்கத்தா அணியும், 14 முறை மும்பை அணியும் வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணி, கொல்கத்தா அணியிடம் அதிக முறை தோல்வி அடைந்தது கிடையாது. அதே நேரம் இதை பயன்படுத்தி ஒரு பெரிய வெற்றியை மும்பை பதிவு செய்யுமா என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

மும்பை அணி

ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஷ்ரேயாஸ் கோபால், ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மத்வால்.

கொல்கத்தா அணி 

பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா.

Published by
அகில் R

Recent Posts

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!

மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…

7 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : ரோஹித் தலைமையில் இந்திய அணி…பிசிசிஐ அறிவிப்பு!

மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி  கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…

19 minutes ago

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு : சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…

35 minutes ago

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ‘இவர்’ தான்! அடித்து கூறும் நெட்டிசன்கள்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…

45 minutes ago

களைகட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! களத்திற்கு தயாரான திமுக vs நாதக!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனுக்கள்…

1 hour ago

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு? த.வெ.க பொருளாளர் சொல்வேதென்ன?

காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…

1 hour ago