RCBvsPBKS : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி ..!! முதல் வெற்றியை பெறுமா பெங்களூரு ..?

RCBvsPBKS Todays Match [file image]

RCBvsPBKS : ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின், 6-வது போட்டியாக இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியுடன் மோதிய பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. மேலும், பஞ்சாப் அணி டெல்லி அணியை வெற்றி பெற்று இந்த போட்டிக்கு வருகிறது.

இதனால் தோல்வியிலிருந்து வந்த பெங்களூரு அணி, வெற்றி பெற்று வரும் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களுருவில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. பேட்டிங் செய்ய சாதகமான மைதானம் என்பதால் டாஸ் வென்ற அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர் :

இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் 31 முறை விளையாடி உள்ளது. அதில் 17 முறை பஞ்சாப் அணியும், 14 முறை பெங்களூரு அணியும் வெற்றி பெற்று உள்ளது. கடைசியாக 2023 ஆண்டில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி 24 ரன்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது, களமிறங்க உள்ள இரு அணிகளும் சமமான பலத்தில் இருப்பதால் எந்த அணி இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

வானிலை அறிக்கை :

இன்றைய நாள் முழுவதும் மைதானத்தில் 34 டிகிரி வெப்பநிலையுடன் வெப்பமான மற்றும் ஈரப்பதமான நிலவி வருகிறது. இதனால் பகல்நேர வெப்பநிலை சுமார் 25 டிகிரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவு நேரத்தில் ஈரப்பதம் சுமார் 35 டிகிரியாக இருக்கும் எனவும் இதனால் சேசிங் அணிக்கு சாதகமாக இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள் (Probable Playing XI) :

பெங்களூரு அணி வீரர்கள் :

ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, கேமரூன் கிரீன், ரஜத் படிதார், க்ளென் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மயங்க் டாகர், கர்ன் ஷர்மா, அல்ஜாரி ஜோசப், முகமது சிராஜ்

பஞ்சாப் அணி வீரர்கள் :

பி சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), ஏ டைட், லியாம் லிவிங்ஸ்டோன், ஜே ஷர்மா (விக்கெட் கீப்பர்), சிக்கந்தர் ராசா, சாம் குர்ரான், எச். பட்டேல், அர்ஷ்தீப் சிங், கே ரபாடா, ராகுல் சாஹர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்