#image_title
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக லக்னோ அணியும், மும்பை அணியும் மோதுகிறது.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 48-வது போட்டியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் வைத்து மோதுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இனி வில்யடும் ஒவ்வொரு போட்டியும் மிகமுக்கியமான போட்டிகள் ஆகும். இந்த போட்டியிலும் இனி விளையாடும் போட்டிகளிலும் ஒரு போட்டியை தோற்றால் கூட நடையை கட்ட வேண்டியது தான். இதனால் மும்பை அணி லக்னோ அணியுடன் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடுவார்கள் என்று மும்பை அணி ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மாவின் 37- வது பிறந்தநாளான இன்று பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
இந்த இரு அணிகளும் நேருக்கு நேராக மொத்தம் 4 போட்டிகள் விளையாடி உள்ளனர். இதில் 3 முறை லக்னோ அணியும், 1 முறை மும்பை அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
லக்னோ அணி
குயின்டன் டி காக், கே.எல். ராகுல்(கேப்டன்/விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்.
மும்பை அணி
ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஷ்ரேயாஸ் கோபால், ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மத்வால்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…